முனைவர் D.மணியன்

மக்கள் மித்திரன் மாத இதழ் கடந்த பத்து வருடங்களாக சென்னையில் இருந்து வெளியாகி வருகிறது. அரசியல், சமூகம் புலனாய்வு செய்திகள் மற்றும் சினிமா, ஆன்மிகம் போன்றவை இதன் சிறப்பு அம்சாமகும்.

முந்தைய ஈரோடு மாவட்டம் தற்போதைய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், குண்டடம் உள்வட்டம், மானூர்பாளையம் கிராமத்தில் உள்ள எஸ்.கள்ளிவலசு எனும் சிறிய கிராமத்தில் 1969-ஆம் ஆண்டு பிறந்தவர் முனைவர் மணியன்.

இவர், சாதரான ஏழைக் குடும்பத்தை சேர்ந்த தானியேல், நாச்சம்மாள் தம்பதிக்கு மூத்த மகன் இவரது ஆரம்ப கல்வியை சொந்த ஊரான எஸ்.கள்ளிவலசில் 5-ம் வகுப்பு வரை படித்து முடித்து, பின்பு நடுநிலைப் பள்ளிப் படிப்பை பூளவாடி மற்றும் மானூர்பாளையம் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரையும், உயர் நிலைப்பள்ளி படிப்பு செஞ்சேரிப்புத்தூரில் பயின்று முடித்தார்.

கல்வி பயின்று பின்னாளில் பல்வேறு பணிகளில் திறம்பட செயல்பட்டு தனது தனித்திறமையால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

அதனையடுத்து உடுமலைப்பேட்டையில் 1999-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை சமூக சேவைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பணிகளை செய்து வந்தார்.

2005-ம் ஆண்டில் ஆத்மா என்ற மாத இதழ் பத்திரிகையில் நிருபராக (செய்தியாளர்) பணியை தொடங்கி பல வார இதழ் பத்திரிகையில் 10 ஆண்டுகளாக பணி செய்துள்ளார்.

2015-ஆம் ஆண்டில் சமூகத்தில் நடக்கும் அடிதட்டு மக்களின் பிரச்சனைகளை அரசுக்கு கொண்டு செல்ல மக்கள் மித்திரன் எனும் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகளாக மக்களுக்கு பத்திரிகை வாயிலாக சேவை செய்து வருகிறார்.

இப்படிபட்ட சேவைப்பற்றி பாராட்டி 2015 ஆண்டில் கோவையில் சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் ஜெர்மன் பல்கலைக் கழகம் சார்பாக முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.

அன்புடன்,
வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர்
முனைவர் D.மணியன்

Publisher & Editor
Dr.D.Maniyan

Scroll to Top